அல்ஜீரியாவில் காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக கூறி ஒருவரை பொதுமக்கள் கூட்டமாக அடித்து கொன்றனர். இந்த வழக்கில் 49 பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்ஜீரியாவில் 2021 ஆகஸ்டு மாதம் காட்டுத்தீ வேகமாக பரவியதில் சுமார் 90 பேர்கள் மரணமடைந்திருந்தனர். இந்த சம்பவத்திற்கு ஜமீல் பின் இஸ்மாயில்(38) (Djamel Ben Ismail) தான் காரணம் என கிராம மக்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர்.
இதை அறிந்த இஸ்மாயில் (Djamel Ben Ismail) போலீசாரின் உதவியை நாடியுள்ளார். அங்கு வந்த பொலிசார் ஜமீல் பின் இஸ்மாயிலை (Djamel Ben Ismail) வாகனத்தில் ஏற்றினர். எனினும் கூட்டமாக வந்த பொதுமக்கள் கட்டுப்பாட்டை மீறிபோலீஸ் வாகனத்தில் இருந்து அவரை (Djamel Ben Ismail) இழுத்து சென்று, கொடூரமாக தாக்கியதுடன், உயிருடன் எரித்துக் கொன்றனர்.
இந்த கலவரத்தில் இஸ்மாயிலை (Djamel Ben Ismail) பாதுகாக்க முயன்ற பொலிசாருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், கைதான கிராம மக்களில் 49 பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 28 பேர்களுக்கு தலா 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும் ஜாமின் மறுப்பும் அறிவித்துள்ளனர்.
அதேவேளை வட அமெரிக்க நாடான அல்ஜீரியாவில் 1993க்கு பின்னர் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்