அர்ஜென்டினாவை வீழ்த்திய சவூதி வீரர்களுக்கு ரூபாய் 18 கோடி பெறுமதியான
ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் பரிசு!
இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் மன்னர், (MOHAMMED BIN SALMAN AL SAUD)
அர்ஜென்டினாவை வீழ்த்திய சவூதி அரேபிய கால்பந்து வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என அந்நாட்டு மன்னர் அறிவித்துள்ளார்.
சாம்பியனை வீழ்த்திய சவூதி, கத்தாரில் நடந்து வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரில், கடந்த 22ஆம் திகதி நடந்த போட்டியில் அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியா வீழ்த்தியது.
சாம்பியன் அணியான அர்ஜென்டினாவை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் சவூதி மன்னர் ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சவூதி மன்னரின் மற்றொரு அறிவிப்பு அந்நாட்டு கால்பந்தாட்ட வீரர்களை இன்ப மழையில் நனைய செய்துள்ளது.
அதாவது, சவூதி வீரர்கள் கத்தாரில் இருந்து திரும்பிய பின்னர் ஒவ்வொரு வீரருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வழங்கப்படும் என மன்னர் அறிவித்துள்ளார்.
ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு 4,60,000 அமெரிக்க டொலர்கள் ஆகும். (இலங்கை நாணயத்தில் சுமார் 18 கோடி ரூபாய்) மன்னரின் இந்த அறிவிப்பு உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இணைந்திருங்கள்