க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 விசேட சித்திகள் பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது. கண்டி, அம்பிட்டிய – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே இதில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தான் பரீட்சையில் 9 விசேட சித்திகள் பெற்றதை தமது பாட்டியிடம் கூறிவிட்டு, தந்தையுடன் நேற்று முன்தினம் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இனந்தெரியாத சிலர் குறித்த மாணவனின் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பிட்டிய பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்களை மேற்கொள்ளும் நபர்களே இந்தச் செயலைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இணைந்திருங்கள்