நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக தகவல் வெளியாகி குழப்பத்தினை ஏற்படுத்திய நிலையில், இதில் மறைந்திருக்கும் உண்மைத் தன்மை தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மீனா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். முன்னணி பிரபலங்களுடன் தற்போது வரை நடித்து வரும் மீனா, குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
நைனிகா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தெறி படத்தில் அறிமுகமானார். மகள் மற்றும் மனைவியை நடிப்பதற்கு அனுமதித்த வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் நுரையீரல் தொற்று ஏற்பட்டு காலமானார்.
கணவரின் இறப்பிற்கு பின்பு நடிகை மீனா, தனது தோழிகளால் மீண்டு வந்த நிலையில், சில படங்களிலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இரண்டாவது திருமணம் வேண்டாம் என்று இருந்த மீனாவை, குழந்தை நைனிகாவிற்காக செய்யக் கோரி குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதாகவும், இதற்கு மீனாவும் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
குறித்த தகவல் உண்மையல்ல என்று அவரது நெருங்கிய வட்டாரத்தினர் திட்டவட்டமாக கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மீனாவுக்கு மறுமணம் செய்யும் எண்ணம் சுத்தமாக இல்லை… அவரது பெற்றோரும் அவரை இரண்டாவது திருமணம் செய்யக் கோரி வற்புறுத்தவில்லை என்றும் வெளியே தற்போது பரவி வரும் தகவல் வதந்தி என்றும் தெரிவித்துள்ளனர்.
இணைந்திருங்கள்