காது வலிக்கு எண்ணெய் விடுவது ஆபத்தான ஒரு விடயம் என்பது எம்மில் பலர் அறியாத ஒன்று. காதுகளில் வலி ஏற்படால் தாங்கி கொள்ள முடியாது. அடிக்கடி காது வலி ஏற்படும் போது நிறைய பேர் தேங்காய் எண்ணெய் அல்லது ஏதேனும் எண்ணெயை சூடாக்கி, வெதுவெதுப்பாக காதுக்குள் விடுவார்கள். இனி அந்த தவறை ஒரு போதும் செய்யக் கூடாது.

காது வலிக்கு என்ன காரணம் என்றே தெரியாமல் எண்ணெய் போன்றவற்றை காதுக்குள் விடுவது பெரும் ஆபத்தில் முடியும்.

காதுக்குள் இருக்கும் சவ்வுகள் மிகவும் மெல்லியது. அதில் வெதுவெதுப்பாக எண்ணெய் ஊற்றுவது சவ்வுகளை பாதிக்கும்.

எனவே இனி காதில் எதுவும் பிரச்சினை இருந்தால் உடனே மருத்துவ சிகிச்சைகளை பெற்று கொள்ளுங்கள்.

ஏன் காதுகளில் வலி ஏற்படுகிறது?

ஆயுர்வேதத்தின் படி, கப தோஷம் செயலிழப்பதன் விளைவாக காது வலி ஏற்படும்.

காதில் கப தோஷம் செயலிழக்கும் போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அரிப்பு, தொடர்ச்சியான வீக்கம், லேசான வலி, அசாதாரண செவித்திறன், பாதிக்கப்பட்ட காதில் இருந்து வெள்ளை வெளியேற்றம் ஆகியவை ஏற்படக்கூடும்.

காது வலிக்கு வீட்டு வைத்தியங்கள்

காது வலிக்கும் போது நிறைய தண்ணீர் குடித்து உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். இதனால் இயற்கையாகவே காது வலி குறைய ஆரம்பிக்கும்.

மருத்துவ ஆலோசனையுடன் நாசி துவாரங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

வலி அதிகமாக இருந்தால் சூடாகவோ அல்லது ஐஸ் கட்டிகளை வைத்தோ ஒத்தடம் கொடுக்கலாம்.

காது வலிக்கு நாம் செய்ய கூடாதவை

காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் செய்யக் கூடாது.

அதிக சப்தத்தைத் தவிர்க்கவும்.

காதில் இயர் போன் வைத்துக் கொண்டு, அதிக சத்தத்தில் படம் பார்ப்பது செல்போன் பேசுவது போன்ற விடயங்களும் காது வலிக்கு அதிக காரணமாகும்.

முக்கிய குறிப்பு

காது வலி தொடரும் போது கட்டாயம் மருத்துவ ஆலோசனைகளை பெற்று கொள்ள வேண்டும்.

சைனஸ், டான்சில், தாடை எலும்பில் பிரச்னை என்றாலும் காது வலிக்கும்.

உடனே அது தொடர்பான சிகிச்சை எடுத்துக் கொண்டால் காது வலி நிற்கும்.