எதிர்வரும் ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை இலங்கை பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், டிசம்பர் மாதம் நிதியமைச்சகத்தின் அனுமதியைப் பெற முடியாது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நிதி உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்வதற்காக கடன் வழங்குனர்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தற்போதைய நிலைமையை சமாளித்துக்கொள்ள முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடன் வழங்குவோரின் நிதிச் சான்றிதழ்கள் கிடைத்தால், ஜனவரியில் நிதி இயக்குநர் குழு ஒப்புதல் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இணைந்திருங்கள்