உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை களுத்துறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மொட்டு கட்சி நேற்று (5) செலுத்தியது.
மொட்டு கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரான முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தலைமையிலே கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சாகர காரியவசம், சனத் நிஷாந்த உள்ளிட்ட மொட்டு கட்சி முக்கியஸ்தர்களும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை கட்டுப்பணம் செலுத்துவதற்கு கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்