மெக்சிக்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னனான | எல் சாப்போவின் மகன் ஓவிடியோ குஸ்மான் லோபஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 10 இராணுவத்தினரும், 19 போதைப்பொருள் கடத்தல் கும்பல் உறுப்பினர்களுமே உயிரிழந்தனர்.
அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மெக்சிகோவில் வன்முறை வெடித்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெக்சிகோவின் பாதுகாப்புச் செயலர் லூயிஸ் கிரெசென்சியோ, “பத்து ராணுவ வீரர்கள்… துரதிர்ஷ்டவசமாக பணியின் போது உயிரிழந்தனர்.
32 வயதான ஓவிடியோ குஸ்மான் லோபஸ், Culiacan நகரில் வியாழக்கிழமை பிடிபட்டார். அவரைக் கண்டுபிடிப்பதற்காக ஆறு மாத உளவுத்துறை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர், இராணுவ விமானத்தில் மெக்ஸிகோ நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
எல் சாப்போ 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதில் இருந்து அவரது போதைப்பொருள் நடவடிக்கைகளை குஸ்மான் வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது.
குஸ்மான் பற்றிய தகவல்களை வழங்குபவர்களிற்கு 5 மில்லியன் டொலர் பரிசை அமெரிக்கா அறிவித்திருந்தது. குஸ்மான் பற்றிய தகவலை வழங்கியவருக்கு அந்த பரிசு வழங்கப்படுமென மெக்சிக்கோ தெரிவித்துள்ளது.
எல் சாப்போவின் Sinaloa cartel கும்பலில் குஸ்மான் ஒரு முக்கிய வீரர் என்று குற்றம் சாட்டிய அமெரிக்கா, அவரை நாடு கடத்த பல ஆண்டுகளாக முயன்று வருகிறது.
குஸ்மானின் கைது மெக்சிகோவில் பரவலான வன்முறையைத் தூண்டியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மெக்சிகோவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னதாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், எல் சாப்போவின் மகன் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. xக்டோபர் 2019 இல், குஸ்மான் கைது செய்யப்பட்டார்.
அந்த நேரத்தில், நூற்றுக்கணக்கான கார்டெல் உறுப்பினர்கள் Culiacan இல் பாதுகாப்புப் படைகளை தாக்கினர். பரவலான வன்முறை வெடித்தது. நகரம் போர்க்களமாக காட்சியளித்தது. குடிமக்களை பாதுகாக்க வேண்டுமென குறிப்பிட்டு, ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தனிப்பட்ட முறையில் குஸ்மானை விடுவிக்க உத்தரவிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அரசு போர் தொடுத்து வருகிறது. இந்த குழுக்கள் மெத்தாம்பேட்டமைன், கோகோயின், ஹெரோயின் மற்றும் பல சட்டவிரோத போதைப்பொருட்களை அமெரிக்காவிற்கு வழங்குகின்றன. இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் தங்கள் செயல்பாடுகளை நிறுவியுள்ளன.
சினாலோவா குழுவைத் தவிர, மெக்ஸிகோவில் லாஸ் ஜெட்டாஸ், ஜுரேஸ் கார்டெல் மற்றும் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (சிஜேஎன்ஜி) ஆகிய மிகப்பெரிய கும்பல்களும் இயங்குகின்றன.
“எல் மென்சோ” தலைமையிலான CJNG மெக்சிகோவில் மிகவும் வன்முறையான குழுக்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டு டிசம்பரில், எல் மென்சோவின் சகோதரர் ஜலிஸ்கோவில் இராணுவம், தேசிய காவலர் மற்றும் பிற அதிகாரிகள் நடத்திய கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.
இணைந்திருங்கள்