இந்தியாவின் உயரிய மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான எய்மஸ் (AIIMS) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. 

ஆண்களின் விந்தணுகளில் SARS-CoV-2 கொரோனா தொற்று இருப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில்,  SARS-CoV-2 கொரோனா தொற்று, விந்தணுக்களின் தரத்தில் குறைத்து, பாதிப்பை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது. 

எய்ம்ஸ் பாட்னாவின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, கொரோனா தொற்று ஆஞ்சியோடென்சின்-மாற்றும் என்சைம்-2 ஏற்பி (angiotensin-converting enzyme-2 receptor) மூலம் பல உடல் உறுப்புகளை சேதப்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது விதைப்பை திசுக்களில் ஏராளமாக உள்ளது. இருப்பினும், விந்தணுவில் உள்ள SARS-CoV-2 தொற்று, விந்தணு உருவாக்கம் மற்றும் கருவுறுதல் திறன் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சிறிய தகவல்கள் கிடைக்கின்றன. 

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்துவில் SARS-CoV-2 இருப்பதை ஆராய்வதற்கும், விந்தணுவின் தரம் மற்றும் DNA Fragmentation Index ஆகியவற்றின் மூலம் கொரோனாவின் தாக்கத்தை ஆய்வு செய்வதற்கும் அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். DNA Fragmentation Index என்றால் விந்தணுவின் மரபணுப் பொருளான டிஎன்ஏவின் நிலைத்தன்மை மற்றும் அதன் சேதத்தை பிரதிபலிக்கும். இதன் மூலம் விந்தணு சேதத்தை துல்லியமாக கண்டறிய இயலும்.

எய்ம்ஸ் பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 19-45 வயதுடைய 30 கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட, ஆண் நோயாளிகளிடம் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் வரை கணக்கெடுப்பு ஆய்வு மேற்கொண்டோம். ஆராய்ச்சியாளர்கள் அனைத்து நோயாளிகளின் விந்து மாதிரிகளிலும் RT-PCR சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

விந்தணுவின் DNA Fragmentation Index உட்பட விரிவான விந்து பகுப்பாய்வு, கொரோனா தொற்று பாதிப்பு காலத்தின் போது எடுக்கப்பட்ட முதல் மாதிரியில் செய்யப்பட்டது. முதல் மாதிரியின் 74 நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது மாதிரி பெறப்பட்டு மேலே உள்ள அனைத்து சோதனைகளையும் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது.

RT-PCR மூலம் சோதிக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாவது மாதிரியில் சேகரிக்கப்பட்ட அனைத்து விந்து மாதிரிகளும் SARS-CoV-2 தொற்றுக்கு எதிர்மறையாக இருந்தன. முதல் மாதிரியில், விந்து அளவு, அதன் உயிர் சக்தி, மொத்த இயக்கம், விந்தணுக்களின் செறிவு, மொத்த விந்தணு எண்ணிக்கை, இயல்பான உருவவியல் (விழுக்காட்டின் அளவு), சைட்டோபிளாஸ்மிக் துளி (விழுக்காட்டின் அளவு) மற்றும் பிரக்டோஸ் ஆகியவை கணிசமாக குறைந்திருந்தன என்று ஆராய்ச்சி கூறுகிறது.

இதற்கு நேர்மாறாக, விந்து திரட்டல், தலை குறைபாடு (விழுக்காட்டின் அளவு), DNA Fragmentation Index, திரவமாக்கும் நேரம், விந்து பாகுத்தன்மை மற்றும் லுகோசைட்டுகள் அதிகரித்தன. இந்த கண்டுபிடிப்புகள் இரண்டாவது மாதிரியில் தலைகீழாக மாறியது. ஆனால், அவை உகந்த நிலையில் இல்லை. இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் புள்ளிவிவர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, கொரோனா தொற்று விந்தணுவின் DNA Fragmentation Index உட்பட விந்து அளவுருக்களை எதிர்மறையாக பாதிக்கிறது.

விந்துவில் SARS-CoV-2 தொற்று இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், இரண்டாவது மாதிரி எடுக்கப்படும் வரை விந்தின் தரம் மோசமாகவே இருந்தது. உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ART- Assissted Reproductive Technology) மருத்துவமனைகள் மற்றும் விந்தணு வங்கி வசதிகள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்துவை மதிப்பிடுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ART அனைத்து கருவுறுதல் சிகிச்சைகளையும் உள்ளடக்கியது. இதில் முட்டைகள் அல்லது கருக்கள் கையாளப்படுகின்றன. இந்த மருத்துவமனை, SARS-CoV-2 கொரோனா தொற்றுக்கு உள்ள ஆண்களின் விந்தின் தரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை சிகிச்சையில் இருந்து விலக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியுள்ளனர்.