தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது பல்வேறு துறைகளிலும் அபரிவிதமான அளவில் இருந்து வருகிறது.அந்த வகையில் ஆட்டோமொபைல் துறையில் நாளுக்குநாள் தொழில்நுட்டபங்கள் அறிமுகமாகி கார் பிரியர்களை கவர்ந்து வருகிறது, 2023ல் முக்கிய பேசும் பொருளாக இருக்கக்கூடிய புதிய மாடல் காரை BMW நிறுவனம் அறிமுகம் படுத்தியுள்ளது.

BMW ஐ.விஷன்டி என பெயரிடப்பட்டுள்ள அந்த மின்சார கார் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த விழாவில் காட்சி படுத்தப்பட்டது. டி என்றால் டிஜிட்டல் எமோஷன் அனுபவம் என விளக்கம் அளித்த BMW தலைமை நிர்வாக அதிகாரி, இது கார் இல்லை ஓட்டுனருடன் உணர்ச்சிப்பூர்வமான உறவை கொடுக்கும் என்று கூறினார். 

ஓட்டுனரின் மன நிலைக்கு ஏற்ப அவருடன் உரையாடும் இந்த கார் தனது பாகங்கள் வாயுலக முகபாவனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் கார் சந்தையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது.

BMW ஐவிஷன்டி அறிமுக விழாவில் பங்கேற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தொழில்நுட்பம் இந்த உலகையே மாற்றும் என்றார். BMW கொண்டு வந்துள்ள இந்த தொழில்நுட்பம் வேடிக்கையாகவும் இருக்கும் என கூறினார். 

விழாவின் நாயகியான டி தன்னை 32 வண்ணங்களுக்கு மாற்றிக்கொள்ளும் தொழில் நுட்பத்தை கண்டு பார்வையாளர்கள் வியந்தனர். சக்கரத்தில் இருந்து காரின் வெளிப்புற பேனல் அனைத்தும் நொடிப்பொழுதில் வெவேறு நிறங்களுக்கு மாற்றும் வகையில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

BMW ஐவிஷன்டி காரின் உட்புறத்தில் அணைத்து இயக்கங்களும் டிஜிட்டல் தொடுத்துரை மற்றும் சென்சார் அடிப்படையில் அமைத்துள்ளன, காரின் ஸ்டேரிங்கும் வித்யாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கூடுதல் தொழில்நுட்ப விவரங்களை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், BMW 2025ம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வர முடிவுசெய்துள்ளது