கிழக்கு உக்ரைனிய சுரங்க நகரமான சோலேடரை முழுமையாக “விடுவித்துள்ளதாக” ரஷ்யாவின் தனியார் இராணுவ நிறுவனமான வாக்னர் குழு புதனன்று அறிவித்தது. இதில், சுமார் 500 உக்ரைன் சார்பு துருப்புக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நகரத்தின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துவதற்கான  சண்டை தொடர்ந்ததாகக் கூறினார்.

வோக்னர் குழு தலைவர் Yevgeny Prigozhin செவ்வாயன்று தனது படைகள் Soledar மீது கட்டுப்பாட்டை வைத்திருப்பதாக அறிவித்தார், ஆனால் நகர மையத்தில் இன்னும் போர்கள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

புதன்கிழமை, அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“உக்ரைனிய இராணுவத்தின் பிரிவுகளிலிருந்து சோலேடார் பிரதேசத்தின் முழுமையான விடுதலை மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன் … சரணடைய விரும்பாத உக்ரைனிய பிரிவுகள் அழிக்கப்பட்டன,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

வாக்னர் படைகள் “சுமார் 500 பேரைக் கொன்றன. முழு நகரமும் உக்ரேனிய வீரர்களின் சடலங்களால் சிதறிக்கிடக்கிறது என்றார்.