முல்லைத்தீவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கமக்கார அமைப்பின் செயலாளரான முல்லைத்தீவு – கல்விளான் பகுதியைச் சேர்ந்த செல்லையா கிருஸ்ணராஜா (வயது – 42) என்பவர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அறுவடைசெய்த நெல்லை வீதியில் உலரவிட்ட பின்னர், அதற்குக் காவல் காத்துக்கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றது.
காயமடைந்தவர் மல்லாவி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலின் பின்னர் மணல் கொள்ளை மாபியாக்கள் தொடர்புபட்டிருக்கலாம் என்று கமக்கார அமைப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இன்னிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண் டுள்ளனர்.
இணைந்திருங்கள்