இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 74 தமிழக கடற்றொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு காலகட்டங்களில் கைதாகி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 64 பேரின் வழக்குகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (30) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த ஜூலை முதலாம் திகதி 25 கடற்தொழிலாளர்களும், ஜூலை 16ஆம் திகதி 04 கடற்றொழிலாளர்களும், ஜூலை 11ஆம் திகதி 13 கடற்தொழிலாளர்களும், ஜூலை 22ஆம் திகதி 22 கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைதாகியுள்ள 64 கடற்றொழிலாளர்களின் வழக்கு விசாரணைகளே செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இணைந்திருங்கள்