ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்களில் சுமார் 102 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் அவர்கள் இதற்கு முன்னதாக ஜனாதிபதியுடன் கருத்துக்களைப் பரிமாறி வருவதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி தலைமையிலான பொதுக்கூட்டத்தில் ஏறக்குறைய அறுபது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ தீர்மானத்தின் அடிப்படையில் தமது தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்க அவர்கள் தயாராக உள்ளதாக எனைய உறுப்பினர்களும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த தரப்பின் 100ற்கும் அதிகமான எம்.பிக்களின் முக்கிய முடிவு | More Than 100 Slpp Mps Ready To Support Ranil

பொது பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தாலும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தற்போதைய  ஜனாதிபதிக்கே ஆதரவளிக்க தயாராக உள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நூற்றி இருபது எம்.பி.க்களில் இருபதுக்கும் குறைவான எம்.பி.க்கள் அக்கட்சியின் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அக்குழுவில் இருந்து பெரும்பாலானவர்கள் தனிப்பட்ட தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் தெரியவருகிறது.