கம்பஹா, கெடவல, அனிகட்டில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் நேற்றிரவு (03-08-2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 18 வயதான இளைஞன்... கம்பஹாவில் சம்பவம் | 18 Year Old Drowned Gampaha Incident

உயிரிழந்த நபரும் ஏனையவர்களும் குறித்த இடத்தில் நீராடச் சென்றிருந்த நிலையில், உயிரிழந்த நபர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் உடுகம்பலை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.