பெற்றோரை இழந்த குழந்தையை த்தது கேட்ட நபருக்கு கேரள அமைச்சர் உருக்கமான பதிலளித்துள்ளார்.
தத்து கேட்ட நபர்
கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து மேப்படி சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. . 200 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுக்க சிலர் முன்வந்துள்ளனர். இந்த நிலையில், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சுதீஷ் என்பவர் தனக்கு குழந்தை இல்லை என்றும் பேரிடரில் பெற்றோரை இழந்த குழந்தையை தன்னிடம் தாருங்கள் எனவும் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
அமைச்சரின் பதில்
அதற்கு பதிலளித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அவரது கருணைக்கு இதயத்தின் ஆழ்மனதில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், வலியை முற்றிலும் புரிந்து கொள்ள முடிகிறது எனவும் பதிவிட்டுள்ளார்.
தங்களின் இதயத்தில் இருந்து வெளியேறிய வார்த்தைகள் தனக்கு கண்ணீரை வரவழைப்பதாகவும் அவர் உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தின் படி, பெற்றோரை இழந்த குழந்தைகளை அரசாங்கமே கவனித்து வருவதாகவும்,
தத்தெடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி, பதிவு செய்து குழந்தை தத்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் சுதீஷிக்கு வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்