மாகாண சபைத் தேர்தலை (Provincial Council Elections) பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என்ற பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) இது தொடர்பான பிரேரணையை தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையாக இன்று (06) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
‘மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை (07) அரசாங்கத்தினால் நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மருத்துவ திருத்த மசோதாக்கள்
அத்துடன் ஓகஸ்ட் 8 ஆம் திகதி, இரண்டு மருத்துவ திருத்த மசோதாக்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அண்மையில் சுமந்திரனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை இம்மாதம் இறுதி வாரத்தில் நாடாளுமன்றில் நிறைவேற்ற ஒத்துழைப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்