மாணவிகளின் பல் திறமைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையின் அதிபர் அஷ்செய்க் யு.எல். மன்சூர் அவர்களின் வழகாட்டலில் இப் பயிற்சி நெறி ஒழுங்கமைக்கப்பட்டதுடன் இன்று ஞாயிற்றுக் கிழமை (28) இல் இப் பயிற்சி நெறிகளை இவ் வித்தியாலய உதவி அதிபர் ஏ.பி.ஏம். ஜலால்தீன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் பயிற்சி நெறிகளை மட்டக்களப்பு மத்தி வலய சிறுவர் விளையாட்டு உத்தியோகத்தரும் St. John Ambulance Brigade இன் மாவட்ட ஆணையாளரும் மாவட்ட முதலுதவி பயிற்றுவிப்பாளருமான எஸ்.எல்.எச்.எம். இனாமுல்லாஹ் அவர்களினாலும் உதவி மாவட்ட முதலுதவி பயிற்றுவிப்பாளருமான பாயிஸ் அவர்களினாலும் மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டதுடன் மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் இப் பயிற்சி நெறிகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இப் பயிற்சி நெறியில் கலந்து கொண்ட மாணவிகள் எதிர்காலத்தில் பாடசாலையின் முதலுதவி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் பயிற்சி நெறியில் 130 மாணவிகள் கலந்து கொண்டதுடன் எதிவரும் வாரங்களில் இப் பயிற்சி நெறிக்காக மேலும் 130 மாணவிகள் இணைத்தக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த பின் இவர்களுக்கான விசேட சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் மாதங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Reporting by
NM.Mohamed Faiz
Kattanakudy