ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது பாதுகாப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக கூறப்பட்டால் அவருக்கான மேலதிக பாதுகாப்பு குறித்து தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் எடுக்கும் என பொலிஸ் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
மேலதிக பாதுகாப்பு
வேட்பாளர்கள் பல்வேறு காரணிகளை முன்வைத்து மேலதிக பாதுகாப்பு கோரினால் அது குறித்து ஆராய்ந்து பாதுகாப்பு வழங்கப்பட முடியும் என தெரிவித்துள்ளது.
அனைத்து வேட்பாளர்களுக்கும் சாதாரணமாக வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பொலிஸ் தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இணைந்திருங்கள்