இந்திய அணிக்கெதிரான இலங்கை அணியின் வெற்றியை தொடர்ந்து இலங்கை முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார (Kumar Sangakkara) மற்றும் லசித் மலிங்க (Lasith Malinga) ஆகியோருக்கு தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரிய (Sanath Jayasuriya) நன்றி தெரிவித்துள்ளார்.
27 வருடங்களின் பின்னர் இந்திய அணிக்கெதிரான தொடர் ஒன்றில் இலங்கை அணி வெற்றியை கைப்பற்றியுள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை அணி 2 வெற்றிகளுடன் கைப்பற்றி 27 வருட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
டெஸ்ட் தொடர்
இந்நிலையிலேயே, சனத் ஜயசூரிய முன்னாள் வீரர்களுக்கான தனது நன்றியை ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த மாதம் 27ஆம் திகதி இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இங்கிலாந்துக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்