ஜுனைடீன் மான்குட்டி தெரிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் முஷார்ரப் பாராளுமன்றில் எமது கட்சியின் சத்திய தலைவர் முதல்நாள் அரச தரப்பு தடைகளுக்கு மத்தியில்இ 45 செக்கன் பேசும்போது….
எதிர் முன் வருசையில் ஜனாதிபதிஇ பிரதமர் இருந்தார்கள் . தலைமையின் பேச்சையும் அவதானித்துக் கொண்டிருந்தார்கள்…..

ஜனாதிபதியும் , பிரதமரும் அமர்ந்திருந்த பாராளுமன்ற அமர்வு நேரத்தில் தலைவருக்கு அருகில் அமர்ந்திருக்க முடியாமல் ஒழிந்து கொண்டுயிருந்த முஷார்ரப் …..
அடுத்தநாள் எமது சத்திய தலைமை 8 நிமிடம் பேசும் போது எதிரில் ஜனாதிபதியோ , பிரதமரோ இல்லாத நேரத்தில் இந்த சத்திய தலைவருக்கு பக்கத்தில் ஓடிபோய்…. அருகில் ஒட்டி இருந்து மக்களுக்கு….படம் மட்டும் காட்டுவது முஷாரபின் இரட்டை முகமாகும்.

மேலும் ஜனாதிபதினதும் பிரதமரினதும் பாராளுமன்ற அமர்வு நேரத்தில் தனது சிறப்புரிமையூடாக தலைவரின் விடுதலைக்கா பேசவில்லை என்பது இந்த முஷார்ரபின் இரட்டை முகத்தை மேலும் ஒரு தடவை வெளிச்சம் போட்டு காட்டுவதாக . உயர்பீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட செயற்குழு செயலாளருமான மான்குட்டி ஜுனைடீன் தெரிவித்தார்.

இனவாதி கம்பன்விலவுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு வாக்களிப்பதற்க்கு முதல் நாளே….நிதியமைச்சரிடம் பொருந்திக் கொண்டு….
வாக்களிப்பு தினத்தன்று காலைஃமாலையில் தலைவரின் வீட்டுக்கு சென்று மனைவியிடம் நடத்திய ஓரங்க நாடகம் எதற்காக…..?

அதற்குள் உள்ள மர்மம் என்ன? சத்திய தலைவனின் தடுப்புக்காவலில் இருந்து விடுதலை பெறுவதை தாமதப்படுத்தி , தங்கள் தேவைகளை முற்படுத்தி ஆடிய சதுரங்க ஆட்டமும்
விரைவில் வெளிவரும் சில உண்மைகளுடன்..
இன்ஷா அல்லாஹ்…

தலைவருக்கு அருகில் காலியாக கிடக்கும்…கதிரைகளில்…ஓடிப்போய் பக்கத்தில் இருந்தால்….தலைவரின் உணர்வில் இருக்கின்றார் என்ற அர்த்தமில்லை…