ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய அரசியல் கூட்டணியை அமைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜாங்க அமைச்சர் ஜனாக வக்கும்புர மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
குறித்த அரசியல் கூட்டணியானது, செப்டம்பர் 5 ஆம் திகதி பத்தரமுல்லையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜன ஜய பெரமுன
ஜன ஜய பெரமுன என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவதை நோக்கமாகக் கட்சி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய கூட்டணி எதிர்காலத் தேர்தல்களில் போட்டியிடக்கூடிய பரந்த கூட்டணியாக மாறும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்