அதலபாதாளத்தில் தள்ளப்பட்டு கிடந்த நாடு, சற்று உத்வேகம் கொண்டு செயற்பட தொடங்கியுள்ள காலகட்டத்தில் மிக அவசியமான ஒரு தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.
எவராலும் இந்த நாட்டை மீளக் கட்டிஎழுப்புவது இலேசான காரியமல்ல என இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் விழி பிதுங்கியிருந்தவேளை தனி ஒருவராகத் தன்னால் முடியும் என தயங்காது தலைமைப் பொறுப்பை பாரம் ஏற்று நாட்டை தூக்கி நிறுத்தியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க .
என சிறிலங்கா சமத்துவ முன்னணியின் செயலாளர். இப்ரான்சா பவ்மி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.
தனக்கான கட்சிப்பலம் இல்லாத போதும்- நடப்பில் இருந்த அரசின் ஆதர வோடு சிதறுண்டு போய் கிடந்த ஜனநாயக ஆட்சியை கட்டி எழுப்பியது மட்டுமின்றி தவித்துப் போய் நின்ற மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியவரும் இவரே.
இத்தகைய நிலையில் 8 ஆவது ஜனாதிபதிக்குரிய பதவிக் காலம் முடிவ டைந்த நேரத்தில் மீண்டும் 9 ஆவது ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டிய ஐனநாயகக் கடமை மக்களாகிய எம்மிடம் வந்தடைந்துள்ளது.
இத்தருணத்தில் இத்தேர்தல் களத்தில் முன்னேற்போதும் இல்லாத வகையில் 39 பேர் போட்டியிட குதித்துள்ளனர். இந்த 39 பேரில் யாரைத் தெரிவு செய்வது என்ற தடுமாற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பமாகும்
இருக்க. இதில் ரணில் விக்ரமசிங்காவை ஏன் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற கேள்வி குறித்து ஆராய இப்பத்தி முனைகிறது.
ரணில் விக்ரமசிங்கின் அரசியல் ரீதியான அறிவார்ந்த தலைமை இந்த நாடு தோல்வியுற்ற நாடு என்ற நிலையிலிருந்து மறுபிறவி எடுத்திருப்பதை இருப்பதை சமகாலத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறது.
“திறமையான சிறந்த தலைமைத்துவம் ஜனநாயகத்தின் வெற்றிக்கான அளவுகோல்” என்பர். சமகாலத்தில் ரணில் விக்கிரமசிங்க இதனை நிரூபித்திருக்கிறார். தம்மை தேசபக்தர் என்று சொல்லிக்கொள்ளும் எவர் ஒருவரும் இந்த நாட்டை இவ்வளவு சீரழிந்த பொருளாதாரத்திலிருந்தும் சிதைந்துபோன இயல்பு வாழ்க்கையிலிருந்தும் காப்பாற்றியிருக்க முடியாது. முக்கியமாக சர்வதேச சமூகம் ரணில் விக்கிரமசிங்க மீது அதிக மதிப்பையும் நம்பிக்கையையும் கொண்டிருக்கின்றது.
இதன் காரணமாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நிதி உதவியின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரகாசமான அறிவையும் வலுவான நம்பிக்கையையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாக அவர் நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பி னார் மற்றும் ஒவ்வொரு இலங்கையருக்கும் இப்போது வாழ்க்கை இருக்கி றது என்ற நம்பிக்கையை ஊட்டினார் என்பதை இவ்வேளயில் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனNவ. இந்நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு போன்ற அத்தியாவசிய பணிகளை முடிக்க ஜனநாயக ரீதியான உச்ச அதிகாரங்கள் அவருக்கு தேவை என்பதை நாம்அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் பின்னணியில் அரசியல்சாயல்களுக்கு அப்பால் நாட்டின் பொருளா தாரத்தை மேலும் வலுவூட்டுவதற்கு மேலும் ஜனநாயக சக்தியை வழங்கு வதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டிய தருணம் இது .
சமகால நிலையில் அரசியல் ஆய்வாளர்கள் முதல் சாமானிய மக்கள் வரைக்கும் எவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என கணிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
கட்சி அரசியலின் அடிப்படையிலான வாக்குகள் மட்டுமே ஊர்ஜிதமாகியுள்ள நிலையில் சாமானிய மக்களின் மிதக்கும் வாக்குகள் இன்னும் சரியான தீர்மானமற்ற நிலையில் முடிவு செய்யப்படாமலே உள்ளன.
இந்நிலையில் இன்று தமிழ்பேசும் சிறுபான்மை இனமேஆட்சியை தீர்மானிக் கும் சக்தியாக மாறியுள்ளது.
இம்முறை நாட்டின் மொத்த வாக்கில் 70 சதவீதமான பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்குகள் நான்காக உடைகின்றன. அதில் ரணிலுக்கு 25 சத வீதமும் அநுராவுக்கு 20 சதவீதமும் சஜித்துக்கு 20 சதவீதமும் நாமலுக்கு 5 சதவீதமுமாக மொத்தம் 70 சதவீதமான வாக்குகளே கிடைக்கவுள்ளன. மீதி 30 சதவிகித வாக்குகளும் தமிழ்-முஸ்லிம்-மலையக மக்களின் வாக்குகளாகும்
இதில் முன்னணியில் உள்ள மூவரில் யாரைதெரிவு செய்ய வேண்டும் என்பது கீழ் காணும் அம்சங்களில் அடங்கியுள்ளது.
ஓன்று தேர்தல்விஞ்ஞாபனங்கள், இரண்டு. எதிர்கால அரசியல் திட்டங்கள், மூன்று சிறுபான்மை மக்களின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான கட்சியின் நிலைப்பாடுகள், நான்கு வெளிநாட்டுடனான உறவுகள், ஐந்து ஊழலுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், ஆறு பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், ஏழு கடந்த காலங்களில் இவர்களின் அரசியல் செயற்பாடுகள், எட்டு கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்களாயின் அந்த ஆட்சியில் உள்ள குற்றங்கள் குறைகள் போன்றனவாகும்.
இவற்றை எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கையில் இந்தநாடு பொருளாதார நிலையில் மேன்மை அடைய வேண்டுமாயின் இப்போதுள்ள நிலையை தக்கவைத்துக் கொண்டு எதிர்காலத்துக்கான சிறந்த வளர்ச்சித் திட்டங் களை உருவாக்கவேண்டிய அவசியம் உள்ளது.
இவற்றை செய்வதற்கு கட்டாயமாக சர்வதேசத்தின் ஆதரவு அவசிய மானது. இந்த ஆதரவைப் பெறக்கூடிய வேட்பாளராக யார் இருக்கிறார் என்று பார்த்தோமாயின் – இடதுசாரி கொள்கைகளை அடிப்படையாக கொண்ட ஜே.வி.பி.யின் தலைவர் அநுரவை வலதுசாரி கொள்கைகளை கொண்ட மேற்குலகநாடுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டா. அதே போன்று நாட்டில் ஏற்பட்ட தளம்பல் நிலையில் உறுதியான நிலைப் பாடுகளை எடுக்க தயங்கிய தலைமைத்துவத்தை கொண்ட சஜித்தையும் மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ளமாட்டா.அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமானவர் ரணில் விக்கிரமசிங்க ஒருவர் என்பதே வெள்ளிடைமலை.
எனவே இம்முறை ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க சிறுபான்மை மக்கள் ஒன்றுபடவேண்டும்.
இணைந்திருங்கள்