கனேடிய(Canada) பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை உள்ளிருக்கும் நடவடிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளீர்ப்பை வரையறுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன் அடிப்படையில் அனேகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் உள்ளீர்ப்பு குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நிலவும் நெருக்கடி நிலை
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்ப்பது குறைக்கப்படும் என குடி வரவு அமைச்சர் அறிவித்திருந்தார்.
குறித்த தீர்மானமானது வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையில் எடுக்கப்பட்டிருந்தது.
மேலும், வீடமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதில் நிலவும் நெருக்கடி நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் புதிய கொள்கை காரணமாக வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 35% வீழ்ச்சி அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்து இந்த எதிர்வு கூறல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் எதிர்வு கூறியதை விடவும் மாற்றம் அதிகமானது என கனேடிய பல்கலைக்கழகங்களின் தலைவர் கேப்ரியல் மில்லர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் எண்ணிக்கை வரையறையானது மாணவர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்