எத்தியோப்பிய அரசுப் படைகளும் அவற்றுடன் இணைந்த ஆயுதக் குழுக்களும் டைக்ரே (Tigray) பிராந்தியத்தின் தலைநகரைக் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக மூன்று தரப்புகள் ஞாயிற்றுக்கிழமை (04) ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.
இது அப்பிராந்தியத்தை நிர்வகித்து வரும் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
எதிர்க்கட்சிக் கூட்டணியை வழிநடத்தும் டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF), ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தலைநகரிலிருந்து பின்வாங்கியுள்ளதாகவும், பிராந்திய அரசாங்கம் “தற்காலிகமாக மெகல்லேவிலிருந்து வெளியேற்றப்பட்டு வேறொரு இடத்திலிருந்து செயல்படும்” என்றும் தெரிவித்துள்ளது.
அரசுக்கு ஆதரவான ‘டிக்ரே அமைதிப் படைகள்’ (Tigray Peace Forces) எனும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஒரு நபர், சனிக்கிழமை மதியம் தங்கள் போராளிகள் மெகெல்லே (Mekelle) நகரின் மையப்பகுதிக்குள் நுழைந்ததாகவும், அவர்களைத் தொடர்ந்து எத்தியோப்பிய இராணுவம் வந்ததாகவும் தெரிவித்தார்.
மனிதாபிமானப் பணி சார்ந்த ஒரு வட்டாரமும், பெயர் குறிப்பிட விரும்பாத மெகெல்லே நகரவாசி ஒருவரும், இந்நகரம் தற்போது அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
மெகெல்லே நகரை இழந்தது TPLF-க்கு ஒரு பெரும் பின்னடைவாகும்.
செப்டம்பர் 23 அன்று எத்தியோப்பிய இராணுவத்திற்கு எதிராகப் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கிய TPLF தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு, அரசு ஆதரவுப் படைகள் மெகெல்லேவைக் கைப்பற்றியது ஒரு பெரும் இழப்பாகும்.
எத்தியோப்பியாவின் மத்திய அரசுப் படைகளும் அவற்றுடன் இணைந்த போராளிகளும் டைக்ரே (Tigray) பகுதிக்குள் விரைவான எதிர் தாக்குதலை நடத்தியுள்ளன.
ஆனால், 2020-2022 காலகட்டத்திலிருந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த மிக மோசமான மோதல், ஒரு பரந்த பிராந்திய அளவிலான மோதலாக விரிவடையும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சூடான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் இணைந்து கிளர்ச்சியாளர் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டி, அடிஸ் அபாபாவில் உள்ள கூட்டாட்சி அரசாங்கம் கடந்த வாரம் எரித்திரியாவுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்