வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள அர்னாப் (ARNAB) சூறாவளி காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (26) வெளியிடப்பட்ட இந்த வானிலை அறிவிப்பு அடுத்த 12 மணி நேரத்துக்கு செல்லுபடியாகும். இது இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என்றபோதிலும், இதன் காற்று சுழற்சி தீவு முழுவதும் பரவுவதால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வட அகலாங்கு 10 முதல் 20 வரையிலும், கிழக்கு நெட்டாங்குக் கோடு 80 முதல் 95 வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முழுமையாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.