பிக்குகள் தமது துறவற ஒழுக்கத்தைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து, பௌத்த சாசனத்தின் கண்ணியத்தையும் மகா சங்கத்தினருக்குச் சமூகத்தில் வழங்கப்படும் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்று பிரதான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இன்று கூட்டறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கூட்டறிக்கையில் மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மற்றும் அமரபுர மகா நிகாய, ராமஞ்ஞ மகா நிகாய ஆகியவற்றின் தலைமைத் தேரர்கள் இணைந்து கையொப்பமிட்டுள்ளனர்.
போராட்டங்கள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடும் போது, பிக்குகள் பௌத்த துறவற மரபுகளையும் விதிகளையும் மீறாது நடந்து கொள்ள வேண்டும் என்றும், பாரம்பரியமாகச் சமூகத்தில் பிக்குகளுக்குக் கிடைக்கும் மதிப்பைக் காப்பாற்ற வேண்டியது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்