இந்து சமுத்திரத்தின் வலிமைமிக்க நாடுகளின் பூகோள அரசியல் தேவைகளிற்காக இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “சுதந்திரமான நாடு என்ற அடிப்படையில் அனைத்து சர்வதேச சவால்களையும் சந்திப்பதற்கு தயார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சவால்கள் காணப்படுகின்ற போதிலும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு தயார். முக்கிய சர்வதேச நாடுகளிற்கு இடையிலான மோதல்களின் ஒரு பகுதியாக விளங்குவதற்கு நான் தயாரில்லை. நாட்டின் பாதுகாப்பை விட்டுக்கொடுக்க தயாரில்லை.” என்றுள்ளார்.
இணைந்திருங்கள்