உலகமே எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு,அனைவரும் உயிர்த்த ஞாயிறு நாளில் உறுதிபூண்டுவோம்” .!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் ஒருபோதும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாதென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தீவிரவாத தாக்குதலுக்கு கிறிஸ்தவ மக்கள் உள்ளாகினர்.

அத்தகைய கொடூர சம்பவத்தை புரிந்த குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்திலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது.

மேலும் மீண்டும் இத்தகையதொரு அனர்த்தம் நிகழாத வகையில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இயேசுநாதர் போதித்த மனித விடுதலை குறித்த செய்தி, சமூகத்திற்கு முக்கியமானதொரு அடித்தளமாக திகழ்கின்றது.

அந்தவகையில் உலகமே எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு,அனைவரும் உயிர்த்த ஞாயிறு நாளில் உறுதிபூண்டுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.