கென்யாவின் ருத் செபன்கெடிச் (Ruth Chepngetich) என்ற பெண்மணி, பெண்களுக்கான அரை மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் ஒரு மணி நேரம், நான்கு நிமிடங்கள் மற்றும் இரண்டு வினாடிகளில் (01:04:02) இலக்கை அடைந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பெப்ரவரியில் எத்தியோப்பியாவின் அபாபெல் யேசானே (Ababel Yeshaneh) பதிவுசெய்த ஒரு மணிநேரம் நான்கு நிமிடங்கள் 31 விநாடிகள் (01:04:31) என்ற சாதனை அரை நிமிடங்கள் வித்தியாசத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதே போட்டியில் எத்தியோப்பியாவின் யலெம்ஸெர்ஃப் யேஹுவாலவ் (Yalemzerf Yehualaw) (1:04:40) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் கென்யாவின் ஹெலன் ஒபிரி (Hellen Obiri) (1:04:51) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அத்துடன், ஒரே அரை மரதன் ஓட்டத்தில் மூன்று பெண்கள் 65 நிமிடங்களுக்குள் ஓடி முடித்துள்ளமையும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.