நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்கின்றன.

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளின், அனைத்து வகுப்பு மாணவர்களிற்குமான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கின்றன.

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த முந்தைய சுற்றறிக்கைகளின்படி பாடசாலைகள் இயங்க ஆரம்பிக்கும்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவலையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் கல்வி செயற்பாடுகளும், நாளை முதல் வழமைக்குத் திரும்பவுள்ளது.