சிறுவண்ணத்துப் பூச்சியின்

முதல் பறத்தல்போல்

தாவியெழும் கற்பனைகள் 

மானசீகமாக எழுகிறது

சோலைவனத்தில் சில்லெனவீசிடும்

குளிர்ச்சியான தென்றலில்

செந்தேன் மொழிதவழும்

சிந்தனை அம்புகளில் பரவசமாகிறேன் 

துருவ நட்சத்திரமாக ஒலிக்கும்

எந்தன் வண்ணக்கனவுகள்

சந்தனக்காடாக உருகி

மஞ்சள் வெயிலோடு

கூடி குதூகலிக்கிறது 

வாடைப் பூங்காற்றில் 

மொட்டு இதழ்விரித்து 

சாய்ந்தாடுவதால்

வீசிடும் காற்றில் ஆடிடும்

பழுத்த இலையாக மனம்

பூவனம் காண்கின்றது 

ஈரச்சுவரைப்போல்

படிக்கப்படாமல் இருந்து

கசிந்துருகும் என் நினைவின்

ராகங்களை 

சுருதி பிசகாமல் கோர்க்கவேண்டும் 

வெயில் தீண்டலில் உருகும்

பனித்துளிபோல்

நினைவுத் தெப்பத்தில் மூழ்கி

நர்த்தனமிடும் தீராக் கனவுகளை

இதய அறைதனில் தாழிட்டு

காட்சிகளாக மீட்டு

மாக்கோலமிடுகிறேன்….

💕பிரபாஅன்பு💕