இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர்  ஜெனரல் வெய் ஃபெங்  நாளை 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார். 

இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்தித்து சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

29 திகதி வியாழக்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் ஜெனரல் வெய் ஃபெங்  ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுகர் நகர்  உட்பட முக்கிய சீன திட்டங்களையும் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை போன்று இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அடுத்த கட்டத்திற்கு விரிவுப்படுத்துவது  சீன பாதுகாப்பு அமைச்சர்  ஜெனரல் வெய் ஃபெங்கின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்