சீனாவில் தம்பதியினர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என சீனா தெரிவித்துள்ளது.உலக மக்கள் தொகையில் சீனாவில் மட்டும் 18.47 சதவீதம் பேர் உள்ளனர்.

அதாவது 143 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவே இப்போது உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். அங்கு 1979ம் ஆண்டு முதல் மக்கள் ஒரு குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள அரசு கொள்கை ரீதியாக முடிவு செய்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

அரசின் முடிவை மீறும் மக்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.இந்நிலையில், அங்கு மக்கள் தொகை விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு புள்ளி விவரம் வெளியிட்டது.

அதன்படி, 2016 முதல் மேற்கண்ட கட்டுப்பாடில் தளர்வுகளை கொடுத்து தம்பதியினர் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அரசு அனுமதியளித்தது. ஆனாலும், மக்கள் தொகை விகிதம் குறைவாக இருப்பதால், மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என கொள்கை அடிப்படையிலான முடிவுக்கு தற்போது வந்துள்ளது சீனா.