சாலமன் தீவுகளில் சீனா இராணுவத்தளத்தை நிறுவாது என்பதில் தமக்கு அதிக நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி தெரிவித்துள்ளார்.
பசிபிக் தீவுகள் கருத்தரங்கில் நேற்று சாலமன் தீவுகள் பிரதமரைச் சந்தித்துப் பேசியபிறகு அவர் ஆஸ்திரேலிய ஊடகங்களிடம் அதனைத் தெரிவித்தார்.
சாலமன் தீவுகளுக்கும் சீனாவுக்கும் இடையே அண்மையில் பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தான சூழலில் அல்பனீசியின் கருத்து வெளிவந்துள்ளது.
அந்த உடன்பாடு சாலமன் தீவுகளில் இராணுவத் தளமொன்றை அமைக்கப் பெய்ச்சிங்கிற்கு அனுமதியளிக்கக் கூடுமென்ற அச்சத்தை உருவாக்கியது.
ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியிலிருந்து 2000 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் சாலமன் தீவு அமைந்துள்ளது.
இதன்போது சாலமன் தீவுகளின் பிரதம மந்திரி மனாசே சோகவரேவை சந்தித்த அல்பனீஸ்,
“நேற்று நான் பிரதம மந்திரி சோகவரேவுடன் மிகவும் ஆக்கப்பூர்வமான சந்திப்பை நடத்தினேன். நேற்றிரவு நான் அவருடன் இரவு உணவில் அமர்ந்தேன், நாம் செய்ய வேண்டிய ஒன்று ஆஸ்திரேலியாவிற்கும் பசிபிக் பகுதியில் உள்ள எங்கள் நண்பர்களுக்கும் இடையே தனிப்பட்ட உறவுகளை உருவாக்குவது. எங்கள் நலன்கள், ஆனால் அவர்களின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.” என்றார்.
இணைந்திருங்கள்