பெகாஸஸ் மென்பொருள் உளவு விவகாரத்தில் எந்த பணப் பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன் என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், இஸ்ரேலின் என்எஸ்ஓ குழுமத்துடன், பாதுகாப்பு அமைச்சகம் எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த கருத்து சரியானதாக இருக்கும் பட்சத்தில், மீதமுள்ள மேலும் சில துறைகளின் மீது எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே பதிலளிக்க முடியும். ஆனால் அவர் தொடர்ந்து ஏன் மௌனம் காத்து வருகிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.