நாட்டின் தற்போதைய நிலைமையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஒரு முடிவை எட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இருப்பினும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் இத்தகைய நடவடிக்கை அரசாங்கத்தின் பிடிவாத அணுகுமுறையை தெளிவாகக் காட்டுகின்றது என்றும் கூறினார்.
இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என குறிப்பிட்ட சஜித் பிரேமதாச இவாறான செயற்பாடுகள் மூலம் அப்பாவி மக்களின் வாழ்க்கையில் அரசாங்கம் விளையாடுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
இணைந்திருங்கள்