அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் அமுலாக்கப்பட்டுள்ள முடக்க நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மெல்பனில் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மெல்பன் நகரில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை தளர்த்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், டெல்டா திரிபுடன் 20 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு தொற்று ஏற்பட்டமைக்கான மூலத்தைக் கண்டறிய முடியாதமை காரணமாக முடக்க நிலையை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 5 மில்லியன் மக்கள் தொடர்ந்தும் வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது