புதிய வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடமைகளைப் பொறுப்பேற்றார்.
நேற்று (16) வெகுசன ஊடக அமைச்சின் புதிய அமைச்சராக பதவியேற்ற டலஸ் அழகப்பெரும, வெகுசன ஊடக அமைச்சில் தனது கடமைகளைப் பெறுப்பேற்றுக்கொண்டார்.
அதற்காக எவ்வித வைபவமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கவில்லை. பின்னர் அமைச்சின் செயலாளர் ஜகத். பீ விஜேவீர தலைமையில் முன்னிலை உத்தியோகத்தர்களுடன் சுருக்கமாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட புதிய அமைச்சர், அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் சமகால நிலைமைகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு முன்னுரிமை வழங்குவதே தனது முதன்மைப் பணியென புதிய வெகுசன ஊடக அமைச்சர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று(16) வெகுசன ஊடக அமைச்சராக டலஸ் அழகப்பெரும அவர்களை நியமித்துள்ளார். இதற்கு முன்னர் டலஸ் அழகப்பெரும மின்சக்தி அமைச்சுப் பதவியை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இணைந்திருங்கள்