ஆப்கானில் உள்ள சிஎன்என்னின் சர்வதேச செய்தியாளர் கிளரிசா வோர்ட் தனது சக பணியாளர் ஒருவரை தலிபான்கள் கைத்துப்பாக்கியால் தாக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். சிஎன்என் தயாரிப்பாளர் பிரென்ட் ஸ்வைல்ஸ் (ஊNN pசழனரஉநச டீசநவெ ளுறயடைள)தனது கையடக்க தொலைபேசி மூலம் படம்பிடித்துக்கொண்டிருந்தவேளை அந்த இடத்திற்கு சென்ற தலிபான்கள் அவரை கைத்துப்பாக்கியால் தாக்க முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் அனைத்து குழப்பமான நிலைகளிலும் தான் செய்தி சேகரித்துள்ளேன் என்றும் இஇது மிகவும் குழப்பமான பைத்தியக்காரத்தனமான நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தலிபான்கள் கைத்துப்பாக்கியுடன் வந்து சிஎன்என்னின் நிகழ்ச்சிதயாரிப்பாளர் ஒருவரை தாக்க முயன்றனர்இ நாங்கள் உடனடி தலையிட்டு தடுத்து தடுக்க முயன்றோம்இ அவ்வேளை இன்னொரு தலிபான் உறுப்பினர் அங்கு வந்து அவர்கள் பத்திரிகையாளர்கள் ஒன்றும் செய்யவேண்டாம் என தடுத்த்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் மிகவும் கசப்பானது ஆபத்தானது என கிளரிசா வோர்ட் (ஊடயசளைளய றுயசன)தெரிவித்துள்ளார். இது முற்றிலும் எதிர்கூறமுடியாத விடயம்இஎன்னை பொறுத்தவரை பலர் கடுமையாக காயப்படாதது ஆச்சரியமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

சிஎன்என்னின் சர்வதேச செய்தியாளரே காபுலில் அதிகளவு காணப்படக்கூடிய செய்தியாளராக உள்ளார்இ ஆப்கான் தலிபானிடம் மிகவேகமாக வீழ்ந்ததை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது கருத்துக்களும் உடையும் சமூக ஊடங்களின் பேசுபொருளாக மாறியுள்ளன. அத்துடன் காபுல் விமானநிலையத்தில் மக்கள் விமானங்களில் ஏறமுயன்றவேளை காணப்பட்ட குழப்பநிலையை அவர் பதிவு செய்திருந்தார்.

இதேவேளை தனது முகத்தை மூடவிட்டால் தன்னுடன் பேசமாட்டேன் என தலிபான் உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாகவும் அவர் பதிவிட்டிருந்ததுடன்இ அந்த தலிபான் உறுப்பினரிடம் சாட்டையொன்று காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.