கொரோனா தொற்றுறுதியான கர்ப்பிணித் தாய்மார்களின் பிரசவத்திற்காக பல வைத்தியசாலைகளில் தனியான சிகிச்சை அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது

அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனால் கர்ப்பிணித் தாய்மார்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.