மொத்த வியாபாரிகள் சீனி விலையை அதிகரித்தது அநீதியாகுமெனவும், ஒரு கிலோ சீனியிலிருந்து அவர்கள் 100 ரூபாய் இலாபம் பெறுவதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கூறுகிறார்.

இது அநீதியாகுமெனக் கூறிய அமைச்சர் தண்டப்பணத்தை அதிகரிக்கும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் அதிக லாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் இப்படிச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்கும் நபர்களுக்கு எதிரான தண்டப்பணத்தை அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்ட போதிலும், பாராளுமன்றத்தில் முதல் வாசிப்பிற்கு சமர்ப்பித்து அதன் பின்னர் அது சட்டமாக்கப்படுவது தாமதமாகியுள்ளதால் தன்னால் எதுவும் செய்ய முடியாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சில வியாபார நிலையங்களில் ஒரு கிலோ சீனியின் விலை 210 ரூபாய் வரை விற்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த வாரம் ஒரு கிலோ சீனியின் விலை 160 ரூபாயாக இருந்த நிலையில், ஒரு வாரத்திற்குள் 50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.