கோவை மாவட்டம் வால்பாறை பாகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, சிறுமியை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனை அடுத்து, மருத்துவமனை சார்பில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமிக்கு, அவரது வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுவனுடன் பழக்கம் இருந்து வந்தது தெரியந்தது.இந்த நிலையில், அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.

இதனை அடுத்து, அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.