அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் பதிவு இட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, மண்டேலா சட்டத்தின்படி சிறைக்கைதிகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறைக்கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உயிருக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்துள்ள அவர், இவ்வாறான சிறைக்கைதிகளுக்கு எதிரான வன்முறைகளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்