தனது 70வது பிறந்த நாளை கொண்டாடும் எஸ்.பி திஸாநாயகவுக்கு  அரசாங்கம் விசேட பரிசு ஒன்றை வழங்க உள்ளதாக தெரியவருகிறது.

தற்போது வெற்றிடமாக உள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சுப் பதவியை அவருக்கு  வழங்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மைத்திரி – ரணில் இடையே மோதல் ஏற்படுவதற்கும் மைத்திரி -மஹிந்த இடையே நட்பு ஏற்படுவதற்கும் முன்னிலையில் நின்று செயல்பட்டவர் எஸ் பி திசாநாயக்க.

அண்மையில் நடந்த ஊடக சந்திப்புகளில் இந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்சவிற்கு பின்னர் மூத்த அரசியல்வாதி தான் எனவும் தனக்கு அமைச்சுப் பதவியை வழங்கவில்லை எனவும் எஸ் பி திசாநாயக்க  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு ராஜாங்க அமைச்சர் பதவி ஒன்று வழங்கப்பட  உள்ளதாக தெரியவருகிறது.

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் எஸ் பி திசாநாயக்க 2 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.