சர்வதேச நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் தவறுதலாக அல்லது சட்டவிரோதமாக நுழைகின்ற இலங்கையின் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கடும் நடவடிக்கைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினருக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினரை இன்று முற்பகல் சந்தித்த போதே அவர் இந்த தெளிவுப்படுத்தலை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சு ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இலங்கை கடற்றொழிலாளர்கள், எல்லைதாண்டிச் சென்று வெளிநாடுகளில் கைதாகின்ற சமயங்களில் குறித்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடற்றொழில் அமைச்சினால் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு வி.எம்.எஸ் கண்காணிப்பு கருவிகளை பொருத்தும் செயன்முறையை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.