புதிய அரசமைப்புக்கான வரைவு நகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விரைவில் கையளிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“புதிய அரசமைப்பை இயற்றும் பணி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவானது, புதிய அரசமைப்புக்கான வரைவு நகலை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றும் உள்ளது. சகல தரப்பினரினதும் கருத்துகளை உள்வாங்கிய பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரச தலைமை முடிவெடுக்கும்” – என்றார்.
இணைந்திருங்கள்