கொழும்பு பாலத்துறையில் விளையாட்டு வீரரை கடத்தி கொலை செய்தது சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் மட்டக்குளி இராணுவ முகாமைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் ஒருவர் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலத்துறை எல்லே விளையாட்டுக் குழுவின் தலைவராக இருந்தவரும், ராகம பட்டுவத்த பிரதேசத்தில் குடியிருப்பவமான அகில சம்பர் ரத்னசிறி என்ற 36 வயதுடை மூன்று பிள்ளைகளின் தந்தை கடந்த ஒகஸ்ட 17ம் திகதி கடத்தப்பட்டிருந்தார். பின்னர் படுகொலை செய்யப்பட்ட இவரது உடல் களனி கங்கையில் கரை ஒதுங்கியிருந்தது.

இந்த விளையாட்டு வீரரின் படுகொலை சம்பந்தமாக அவரது மனைவியான சமிட்புர முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் மட்டக்குளி இராணுவ முகாமில் கடமையாற்றும் 13 படை வீரர்கள் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் தற்போடு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.