இலங்கையில் கோவிட் தொற்று மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தரவுகளின் அறிவியல் விசாரணையின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் நோய்த்தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், இதற்கான பொறுப்பை மக்களே ஏற்க வேண்டும். அத்துடன் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,017ஆக அதிகரித்துள்ளது. நேற்றும் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், டிசம்பர் முதலாம் திகதிக்குள் இலங்கையில் கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 12,000 ஆக இருக்கும் என வாஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.