நோர்வேயில் 102 நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெறும் உலகக் கிண்ண மல்யுத்த போட்டியில் கலந்துகொள்ளும் இலங்கை மல்யுத்த அணி இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

நாட்டில் உருவாகியுள்ள டொலர் நெருக்கடி காரணமாக, வீரர்களுக்குக் பணம் செலுத்துவதில் சிக்கல் காணப்பட்டதால் இலங்கை அணி இந்தப் போட்டிகளில் கலந்துகொள்வது இறுதித் தருணம்வரையில் நிச்சயமற்றதாகக் காணப்பட்டது.

இலங்கை மல்யுத்த அணியில் வீராங்கனை ஒருவரும் உள்ளடங்குகிறார். 

இதேவேளை, நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கருத்து வெளியிட்ட இலங்கை மல்யுத்த சம்மேளத்தின் தலைவர் சரத் ஹேவாவிதாரன, மேற்படி விடயத்தால் ஏற்பட்ட சிக்கல் தொடர்பில் விளையாட்டுத்துறை அதிகாரிகளின் மீது குற்றம் சுமத்தினார்.